அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன...?
முதலில் அலைக்கற்றை எனப்படும் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று பார்க்கலாம். 1990க்கு முன்பு நமது தொலைபேசிகள் எல்லாம் கம்பி வழியாக செயல்பட்டன. நாடு முழுக்க கம்பி வலைப்பின்னல் போடப்பட்டு, இந்த தொலைபேசி சேவை இயங்கியது. பின்னர் செல்பேசி வந்ததும் இந்த கம்பிவழி தேவைப்படவில்லை. இதன்படி மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றைவரிசையில் அனுப்பப்பட்டு, செல்பேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. கிட்டத்தட்ட ரேடியோ செயல்படும் விதத்தைப் போலத்தான் இதுவும். அதனால்தான் செல்பேசிகளில் எஃப்.எம். வானொலி சேவை கிடைக்கிறது. இந்த அலைக்கற்றைகள் உலகமெங்கும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுப் பல நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இது, பல வானொலி நிலையங்களுக்குப் பல்வேறு அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு ஒப்பானது.
உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
இந்த ஊழல் குறித்து பேசுவதற்கு முன், ஊழலின் தொகை எப்படி இவ்வளவு பெரிதானது என்ற கேள்வி எழும். சிம்பிளாக பார்க்கலாம். இரண்டு வீடுகளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு வீடுகளையும் விற்கிறீர்கள். முதல் வீட்டை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கிறீர்கள். ஆனால் செய்தித் தாளில் விளம்பரம் ஏதும் கொடுக்காமல் முதலில் விலைக்குக் கேட்பவருக்கு கொடுக்கிறீர்கள். அடுத்த வீட்டை விற்பதற்கு செய்தித் தாளில் விளம்பரம் செய்கிறீர்கள். ஐம்பது லட்ச ரூபாய்க்கு போகிறது. இப்போது நீங்கள் முதல் வீட்டை விற்கையில் செய்தித் தாளில் விளம்பரம் தராமல், முதலில் கேட்பவருக்கு விற்றதால், நீங்கள் 49 லட்சம் நஷ்டம் அடைந்தீர்கள் என்றால் அது சரிதானே… இதுதான் அலைக்கற்றை விவகாரத்தில் நடந்தது.
இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எழுந்த குற்றச் சாட்டுகள் என்ன?
1) 2008ம் ஆண்டில் 2001ம் ஆண்டில் இருந்த விலைகளுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து விட்டது என்பதை பொருட்படுத்தாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது.
2) தொலைத் தொடர்பு பிசினசில் இல்லாத கட்டுமானக் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது.
3) ஏலத்தில் லைசென்ஸ் வழங்காமல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முறையை கடைபிடித்தது.
4) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை திடீரென்று மாற்றி, பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை தவிர்த்தது
5) விண்ணப்பிக்க கடைசி நாளை திடீரென்று மாற்றியதன் மூலம் 575 விண்ணப்பங்களில் 122 பேருக்கு மட்டும் மொத்த அலைக்கற்றையையும் வழங்கியது.
6) ட்ராய் பரிந்துரைகளை மீறியது
7) தொலைத் தொடர்புத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், அத்துறையில் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு அலைக்கற்றையை மறு விற்பனை செய்ய வழி கோலியது.
8) சட்டத்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிந்துரைகளை மீறியது.
9) ரோல் அவுட் ஆப்ளிகேஷன் எனப்படும், ஒதுக்கீடு பெற்ற குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் மீற அனுமதித்தது.
இதுதான் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக இருக்கக் கூடிய முக்கிய குற்றச் சாட்டுகள்.
விரிவாகப் பார்ப்போம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுரைகள் ஒவ்வொரு முறையும் மீறப் பட்டது என்பதை சிஏஜி அறிக்கையில் நிதி அமைச்சகமே சுட்டிக் காட்டியுள்ளது. தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாத போது, அமைச்சரவையை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
1.10.2007 வரை தொலைபேசி அலைக்கற்றை லைசென்சு வேண்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவிக்கிறது. அதன் படி, 537 நிறுவனங்கள் லைசென்சு வேண்டி விண்ணப்பிக்கின்றன. திடீரென்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்ட ஆ.ராசாவின் அமைச்சகம் 25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஒரு குண்டை தூக்கிப் போடுகிறது. இதில் வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு இந்த சதிச் செயல் விளங்கும்.
25.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 232. 25.09.2007 முதல் 30.09.2007 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 76. 01.10.2007 அன்று விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 267. இந்த கடைசி நாளன்று தான், விண்ணப்பங்கள் அதிகம். மொத்தத்தில் 122 நிறுவனங்களுக்கு மட்டுமே லைசென்சுகள் வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த 122 நிறுவனங்களுக்கும் இருந்த மொத்த ஸ்பெக்ட்ரமும் ஒதுக்கீடு செய்து முடித்தாகி விட்டது. இனி ஒதுக்கீடு செய்ய ஸ்பெக்ட்ரமே இல்லை என்பதால் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைக்காத மற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனனங்களுக்கு விற்ற விபரங்களை வெளியிடத் தொடங்குகின்றன.
ட்ராய் நிறுவனத்தின் மற்றொரு விதி, லைசென்ஸ் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஆர்டர் பெற்ற நாளிலிருந்து மெட்ரோ நகரங்களில் முதல் ஆண்டுக்குள்ளாகவும், மற்ற நகரங்களில் முதல் ஆண்டுக்குள் 50 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவும், செயல்படுத்த வேண்டும் என்று ட்ராய் ஆணையிட்டுள்ளது. இதை Roll Out Obligation என்று அழைக்கிறார்கள். ஆனால் ராசாவின் அமைச்சகம், 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆர்டர் பெறும் நாளிலிருந்து என்ற வரையறையை ஸ்பெக்ட்ரம் வழங்கப் பட்ட நாளிலிருந்து என்று மாற்றுகிறது. இந்த மாற்றம், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காகவே என்று சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
ட்ராய் அமைப்பின் மற்றொரு முக்கியமான விதி லைசென்சு பெற்ற ஒரு நிறுவனம் அது தொடர்பான வேலைகள் அத்தனையும் (Roll out obligation) முடியும் வரை அதன் பங்குகளை விற்கவோ, வேறு நிறுவனத்தை வாங்கவோ கூடாது என்பது. எதற்காக இந்த விதி என்றால், ஒரு நிறுவனம் லைசென்சு பெற்றுக் கொண்ட பின், லைசென்சு கிடைக்காத வேறு ஒரு நிறுவனத்துக்கு அதை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் ராசாவின் அமைச்சகம், தனது 19.10.2007 நாளிட்ட பத்திரிக்கை செய்தியில், “எல்லா வேலைகளும் முடிக்கும் வரை (Roll out obligation) ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தோடு இணையக் கூடாது. ஆனால் இதற்கான கோரிக்கை பரிசீலிக்கப் படலாம்“ எப்படி இருக்கிறது ? இந்த விதிவிலக்கை பயன்படுத்தித் தான் 1537.01 கோடிக்கு 16 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்ற ஸ்வான் நிறுவனம் தனது 45 சதவிகித பங்குகளை மட்டும் 9400 கோடிக்கு விற்க முடிந்தது. அதே போல 1658.57 கோடிக்கு 22 வட்டங்களுக்கு லைசென்ஸ் பெற்றிருந்த யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவிகித பங்குகளை 11,600 கோடிக்கு விற்க முடிந்தது. இவ்வாறு பங்குகளை விற்ற இந்த இரண்டு நிறுவனங்களும், ஒரு டவரை கூட நிறுவவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது தொழில் தொடங்கும் முன்பாகவே லாபம்.
அடுத்த முறைகேடு ஸ்பெக்ட்ரம் இருப்பு தொடர்பானது. ராசா அமைச்சகத்தின் அக்டோபர் 2007 பத்திரிக்கை செய்திக்குப் பிறகு, மன்மோகன், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அனைவருக்கும் ஸ்பெக்ட்ரம் இருக்கிறதா என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இருப்பை பொறுத்து வழங்க வேண்டும் என்றும் கூறுகிறார். ராசா மன்மோகனுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதுகிறார். அக்கடிதத்தில், இப்போது 122 பேருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவிக்கிறார். ஆனால் அவ்வாறு பிரதமருக்கு மறுமொழி எழுதும்போதே, மீதம் உள்ளவர்களுக்கு ஒதுக்க ஸ்பெக்ட்ரம் இல்லை என்பது ராசாவுக்கு தெரியும். இந்த ஒதுக்கீட்டிலும், கடைசி தேதியை மாற்றுவதிலும் உள்ள தவறுகளை இரண்டு தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டி நோட் எழுதுகிறார்கள். ஒருவர் டி.எஸ்.மாத்தூர் இவர் தொலைத் தொடர்பு துறை செயலர். இவர் கடைசி தேதியை மாற்றக் கூடாது என்று எழுதிய கோப்பை ராசா ஓரமாக வைத்து விட்டு, வேறொரு கோப்பில் நடவடிக்கை எடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்குகிறார். மற்றொருவர் தொலைத் தொடர்பு நிதி உறுப்பினர் மஞ்சு மாதவன். இவர் ஆ.ராசாவின் நெருக்கடி பொறுக்க முடியாமல் விருப்ப ஓய்வில் செல்லுகிறார்.
இதற்கு நடுவே, கடைசித் தேதியை 1.10.2007ல் இருந்து 25.09.2007க்கு மாற்ற சட்ட அமைச்சகத்தின் சம்மதத்தை பெற, ராசா சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். சட்ட அமைச்சர், இதை அமைச்சரவை அதிகாரக் குழுவிற்கு அனுப்பிய பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். இதற்கு பதிலாக ராசா என்ன செய்கிறார் தெரியுமா..? 1.11.2007ல் பிரதமருக்கு, சட்ட அமைச்சர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கடிதம் எழுதுவதாக தெரிவிக்கிறார். தாமதமாக விழித்துக் கொண்ட ட்ராயும் தன் பங்குக்கு, ராசாவை தடுக்க முயற்சி செய்கிறது. ட்ராய் வழிகாட்டுதல்களில் சந்தேகம் இருந்தால், மீண்டும் ட்ராயை அணுக வேண்டும் என்ற சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டி, 15.10.2007 அன்று, ட்ராய், ராசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தில் சட்டத்தில் உள்ளவாறு மறு வழிகாட்டுதலுக்கு ஒரு கடிதம் எழுதும் படியும், அவ்வாறு எழுதவில்லையென்றாலோ, உதாசீனப்படுத்தினாலோ, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டது. 19.10.2007 அன்று ஆ.ராசா வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகு, உடனடியாக மறு ஆலோசனைக்கு கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியுள்ளது. அப்போதும் ராசா அசையவில்லை. 14.01.2008 அன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறது. இந்தக் கடிதத்தையும் ராசா நிராகரித்தார்.
இதன் நடுவே, இப்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் அப்போதைய நிதித் துறைச் செயலர் சுப்பாராவ், 22.11.2007 அன்று, வெறும் 1658 கோடி ரூபாய்க்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்திருப்பதை கடுமையாக கண்டித்து ஒரு கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதத்தையும் ராசா குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டார். “முதலில் வருபவருக்கே முன்னுரிமை“ என்ற கொள்கையை எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்தார்கள், அதனால் நானும் கடைபிடித்தேன் என்று ராசா சொல்லும் காரணத்திலும் வலு இல்லை. ஏனெனில் 2003ல் முதன் முறையாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று அறிவிப்பு வெளியிட்ட போது 200 லைசென்சுகள் வழங்க அரசு வசம் அலைக்கற்றை இருந்தது. ஆனால் விண்ணப்பம் செய்ததோ வெறும் 51 நிறுவனங்கள் தான். 2003ல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறை கடைபிடிக்கப் பட்ட போது இருந்த விதி, முதலில் விண்ணப்பம் செய்பவர் முதலில் வந்தவராக கருதுப்படுவார் என்பது. ஆனால் ராசா இந்த விதியையும் மாற்றுகிறார். என்னவென்றால், முதலில் லைசென்சு வழங்கியதற்கான தகுதிகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் என்று. அதாவது என்னவென்றால், லைசென்சு உங்களுக்கு வழங்கப் பட்டால், லைசென்சுக்கான மொத்த தொகையையும் வங்கி வரைவோலை மூலமாக செலுத்துபவருக்கே ஸ்பெக்ட்ரம் என்பது. இவ்வாறு விதியை மாற்றி 10.01.2008 அன்று பத்திரிக்கை செய்தி மூலமாக அறிவிப்பு வெளியிடுகிறார் ஆ.ராசா.
இது போல வழிமுறையை திடீரென்று மாற்றியதால் பல நிறுவனங்கள் தொகையை வரைவோலையாக செலுத்த முடியாமல் திணறின. தொகை என்றால் ஆயிரம் ஐநூறு கிடையாது.. 1500 கோடி, 2000 கோடி என்ற அளவில். அரை நாளுக்குள் 2000 கோடிக்கு, நீங்கள் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி…. வரைவோலை எடுத்து விடுவீர்களா? ஆனால், ராசா ஒதுக்கிய ஸ்பெக்ட்ரம் திட்டத்தின் படி, 13 விண்ணப்பதாரர்கள் வரைவோலையோடு தயாராக அலுவலகத்திற்குள்ளேயே இருந்தார்கள். ஆக முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையையும் ராசா சரிவர பின்பற்றவில்லை. மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில், அரசுக்கு ஏராளமான வருமானம் வந்து குவிந்தவுடன், ஆ.ராசா சொன்ன பதில் ஞாபகம் இருக்கிறதா ? “3ஜி பாஸ்மதி அரிசி போல… அதனால் விலை அதிகம். 2ஜி கருணாநிதி போடும் ஒரு ரூபாய் அரிசி போல. “ மேலும் ராசா சொன்ன மற்றொரு காரணம், போட்டியிடும் நிறுவனங்கள் விலையை அதிகம் கொடுத்தால், அது வாடிக்கையாளரின் தலையில்தான் விடியும். அதனால்தான் குறைந்த விலைக்கு கொடுத்தோம் என்பது. ராசாவின் கூற்றுப் படியே பார்த்தாலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 10 மடங்கு விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு நிறுவனம் எப்படி குறைந்த விலைக்கு கொடுக்க முடியும் ? மேலும், டாடா நிறுவனம் 2ஜிக்கு கொடுத்த தொகை 12 கோடி. 3ஜிக்கு கொடுத்த தொகை 152 கோடி. ஆனால் 3ஜிக்கு டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை என்ன தெரியுமா ? ஒரு வினாடிக்கு 66 காசுகள். இந்தத் தொகையும் போகப் போக குறையவே வாய்ப்பு உள்ளது. 1995ம் ஆண்டு, இதே போல ஏலம் விட்ட போது, இந்தியாவில் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பலர் முன்வரவில்லை என்ற வாதமும் சொத்தையானது. ஏனெனில், இந்தியாவில் 1995ல் தான் செல்பேசி என்ற விஷயமே அறிமுகம் ஆகிறது. யாருக்கும் அனுபவம் இல்லை. இன்கமிங் 18 ரூபாய் அவுட்கோயிங் 30 ரூபாய் என்ற தொகை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் 2007ல் பல ஆபரேட்டர்கள் உள்ளனர். அவுட் கோயிங் 10 காசு என்ற வரை ரேட் குறைந்து விட்டது. இப்போது 1995ல் உள்ள நிலையை ஒப்பீடு செய்யும் ராசாவின் தந்திரம் அயோக்கியத்தனமானது.
அடுத்து ராசா எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் இந்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு குழுவைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதை உடைக்கவே புதிய நிறுவனங்களை அனுமதித்தேன் என்பது. இவர் சொல்லும் அந்தக் குழுவில் கூட அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்லும், எம்.டி.என் எல்லும் இருந்தனவே ? இதே கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட, திறந்த முறை ஏலத்தில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் ? கடைசி தேதியை மாற்றி வைப்பதால் குழுவாகச் செயல்பட்டவர்களை உடைத்தேன் என்றுராசா சொல்லுவது சோற்றுக்குள் பூசணிக்காயை மறைப்பதே தவிர வேறொன்றும் இல்லை.
ஏலத்தில் விடுவதன் மூலமாக மக்களுக்கு விரைவாக சேவை கிடைக்கவே வாய்ப்பு அதிகம். ஏனென்றால் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதலில் வாடிக்கையாளரைக் கவருவதற்காக வேக வேகமாக வேலையை துவக்கி முதலில் வாடிக்கையாளரை யார் பிடிப்பது என்று முனைப்பாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்லப் போனால், டாடா நிறுவனம், 3ஜி ஏலத்தில் எடுத்த 4 மாதத்தில் தனது 3ஜி சேவையை துவக்கி விட்டது. இதையே 2ஜியோடு ஒப்பிட்டீர்கள் என்றால், ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 85 நிறுவனங்கள் வேலையை தொடங்காமல் இருக்கின்றன, அதனால் அவற்றின் லைசென்சுகளை ரத்து செய்யப் போகிறோம் என்பதுதான் ட்ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு. மேலும் 2ஜி லைசென்சுகளைப் பெறுவதற்கென, கடுமையான தகுதிகளை ட்ராயும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகமும் விதித்திருக்கின்றன. வழங்கப் பட்டுள்ள 2ஜி லைசென்சுகளை பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் தகுதியே இல்லாத நிறுவனங்கள் என சிஏஜி தனது அறிக்கையைல் தெரிவித்திருக்கிறது.
ராசாவின் கண்ணசைவு இன்றி இத்தனை தகுதியில்லாத நிறுவனங்கள் லைசென்சுகள் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகமே…. லைசென்சு பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் பினாமி நிறுவனங்களாகவே இருப்பது இன்னொரு பெரிய முரண்பாடு.
உதாரணத்திற்கு அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனம் என்ற நிறுவனம் 6.9.2007ல் மத்திய பிரதேசத்துக்கும் பீகாருக்கும் லைசென்சுகளைப் பெற்றது. இந்த நிறுவனத்தில் ஆஷிஷ் தியோரா என்பவர் 25 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். க்ளாரிட்ஜெஸ் இன்போடெக் என்ற நிறுவனம் 50 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. இந்த க்ளாரிட்ஜெஸ் நிறுவனத்தின் பங்குகளை யார் வைத்திருக்கிறார் என்று பார்த்தால் ஆஷிஷ் தியோரா 99.77 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அலையன்ஸ் இன்ப்ராடெக் நிறுவனத்தில் 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பது யார் என்பது புரிகிறதா ? இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பெரிய பங்கு இருக்கும் செய்திகள் வெளிவந்ததும், ராசாவின் அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அதை மறுத்து, விண்ணப்பம் செய்யும் நேரத்தில் அதாவது 2 மார்ச் 2007 அன்று உள்ளபடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 10 சதவிகித பங்குகள் தான் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா ? ஸ்வான் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு 9.90 சதவிகித பங்குகள். டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 90.09 சதவிகித பங்குகள். 90.09 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டைகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா ? தலா 25 சதவிகிதம் வீதம். 75 சதவிகித பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆஷிஷ் கரேகர், தினேஷ் மோடி மற்றும் பரேஷ் ராதோட். இவர்கள் மூன்று பேரும் அனில் அம்பானி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள். இப்போது ஸ்வான் நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்று புரிகிறதா ?
3ஜி ஏலத்திலேயே 67 ஆயிரம் கோடிதானே வந்தது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும்? என்று.. சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 2ஜி ஏலம் நடந்திருக்க வேண்டிய ஆண்டு ஜனவரி 2008. அப்போது செல்பேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 250 மில்லியன். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையையும் கணக்கில் வைத்துப் பார்த்தால் இன்னும் 750 மில்லியன் இணைப்புகள் வர வாய்ப்பு உள்ளது என்று நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுக்கும். 3ஜி ஏலம் நடக்கையில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 600 மில்லியனை தொட்டு விட்டது. எவ்வளவு தொகைக்கு எடுத்தாலும் இன்னும் 400 மில்லியன் இணைப்புகள் தான் வளர்ச்சியின் அளவு எனும் போது எப்படி அதிக தொகைக்கு ஏலம் எடுப்பார்கள். அதனால் தான் 3ஜி ஏலம் வெறும் 67 ஆயிரம் கோடிக்குப் போனது.
2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையை மீறி மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா செயல்பட்டுள்ளார் என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி-யின் 77 பக்க அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அனைத்து விதிமுறைகளும், நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர் ராசா செயல்பட்டுள்ளார்.
ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு 2007-ம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளார். அதில் லைசென்ஸ் வழங்குவதில் ஒளிவு, மறைவற்ற தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்றும் லைசென்ஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். அலைக்கற்றை போதுமான அளவுக்கு இல்லாததாலும், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாலும் இதில் வெளிப்படையானத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, சட்ட அமைச்சகம், அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவைக் கூட்டி இது குறித்து விவாதிக்கலாம் என்றும் அதில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தது. இதே கருத்தை நிதி அமைச்சகமும் சுட்டிக் காட்டியிருந்தது.
ஆனால் இவை அனைத்தையும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் புறக்கணித்துவிட்டது. புதிதாக கொள்கை வகுப்பதாயிருந்தால்தான் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும். ஆனால் இப்போது புதிய கொள்கை ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசென்ஸ் (யுஏஎஸ்எஸ்) வழங்குவதில் அமைச்சர்கள் குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டியதில்லை என ராசா தெரிவித்துவிட்டார்.
தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வகுத்தளித்த விதிமுறைகளுக்குக் கூட முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. விதிமுறைகள் எதுவும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
122 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 35 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை தொழில்நுட்பம் (சிடிஎம்ஏ-ஜிஎஸ்எம்) லைசென்ஸýம் அடங்கும். இவை அனைத்தும் 2007-08-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,645 கோடியாகும்.
லைசென்ஸ் கோரிய நிறுவனங்களின் விண்ணப்பங்களை தொலைத் தொடர்புத் துறை பரிசீலித்ததில் மொத்தம் விண்ணப்பித்த 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதுமான நிதி மூலதனத்தை உடையனவாக இருக்கவில்லை. இந்த 85 நிறுவனங்களில் 45 நிறுவனங்கள் மிக முக்கியமான நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்களுக்கு இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்குவதில் போதிய வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை. இதேபோல இரட்டைத் தொழில்நுட்பம் தேவை என மனு செய்த நிறுவனங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் 2003 மத்திய அமைச்சரவை எடுத்த முடிவையும் ஆ. ராசா மீறியுள்ளார். அதாவது இரட்டைத் தொழில்நுட்ப லைசென்ஸ் வழங்கும்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என கூறியிருந்தது.
2007-ம் ஆண்டு அக்டோபரில்தான் இரட்டைத் தொழில்நுட்ப முறை அமலுக்கு வந்தது. இதற்கான லைசென்ஸ் வழங்குவது விரைவாகவும், சட்ட விதிமுறைகளையும் மீறி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப முறையிலான சேவை குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூன்று நிறுவனங்களுக்கு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது. இது இத்துறையில் மற்ற நிறுவனங்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கை என்றும் சுட்டிக் காட்டியது.
லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களில் சில, சேவையைத் தொடராமல் அதிக விலைக்கு பிற இந்திய அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கு தங்களது பங்குகளை விற்பனை செய்துள்ளன என்றும் சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
லைசென்ஸ் கோரி விண்ணப்பித்த நிறுவனங்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து இதற்கென நிர்ணயிக்கப்பட்ட தேதியை முன்னறிவிப்பின்றி மாற்றியுள்ளது. செப்டம்பர் 25,2007-ல் வந்த விண்ணப்பங்களில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு பிராந்தியங்களில் தொலைத் தொடர்பு சேவை தொடங்க மொத்தம் 157 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு நியாயமான விலை நிர்ணயித்திருந்தால் 58 ஆயிரம் கோடியிலிருந்து 1,52,038 கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும். 51 வட்டாரங்களில் 13 நிறுவனங்கள் சேவை தொடங்க 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் அளித்த தொகை வெறும் 2,561 கோடி மட்டுமே.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 3-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை பின்பற்றப்பட்டது. இதனால் அரசுக்கு 67 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இத்தகைய வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1,76,379 கோடியாகும்.
இந்தத் தொகையில் நாடு முழுவதும்
* தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்;
* ரூ. 1 கோடி வீதம் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்;
* ரூ. 5 கோடி வீதம் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்;
* ரூ. 100 கோடி வீதம் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்;
* 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்;
* 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம்.
* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.
· மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
· தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
· இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வரவுகள் 63 ஆயிரத்து 91 கோடியே 74 லட்சம் ரூபாய் எனவும், செலவுகள் 66 ஆயிரத்து 488 கோடியே 19 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,396 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஆகிறது. இதுதவிர, கடன்கள், முன்பணம், மூலதனச் செலவுகளை கணக்கிட்டால், 16 ஆயிரத்து 222 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது. எனவே, 1.76 லட்சம் கோடி ரூபாய் இருந்தால், 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும். தமிழக அரசு எந்த வருவாயும் பெறாமல், மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும்.
இவ்வளவு ஏன்..? தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும். ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும
ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் - ஒரு டைரிக் குறிப்பு:
2007 மே 18 : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
2007 ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
2007 ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டுஎழுந்தது.
செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்றுகுற்றச்சாட்டுகள்எழுந்தன.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்றுவிட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாகநிறைவேறியது.
14
2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
2008 செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைதொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது..இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாககுற்றச்சாட்டுஎழுந்தது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008ம் ஆண்டு வரையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ்வழங்கிஉள்ளது.
2009 நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர்மன்மோகன்சிங்கிற்குஅனுப்பியது.
2009 அக்டோபர் 21 : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கடிதங்களை எழுதி உள்ளார்.
2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.
15
2010 அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா', என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
2010 நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 நவம்பர் 10: டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அம்மா அளித்தப் பேட்டியில் ராசாவை உடனடியாகப் பதவி நீக்க செய்தால் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் கூறினார்.
2010 நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
இந்திய ஊழலின் இதயத்தில் பொறுத்தமற்ற மனிதர்
இப்படித்தான் நியூயார்க் டைம்ஸ் ஆண்டிமுத்து ராசாவை வர்ணிக்கிறது.
21.11.2010 அன்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்த கட்டுரை மொழி பெயர்ப்பு
ஒரு சாதாரண ஊரில் உள்ள ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பிராந்தியக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். எப்படிப் பார்த்தாலும் தொலைத் தொடர்புத் துறையிலோ தொழில் வணிகத்திலோ சிறிதும் அனுபவம் இல்லாத ஒரு நபர் மிக வேகமாக வளர்ந்து வரும் செல் பேசி சந்தையை நிர்வகிக்கும் அமைச்சராவார் என்பதை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.
ஆனால் அவரிடம் என்ன தேவையோ அது இருந்தது. காங்கிரசின் மிக முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரின் எக்கு போன்ற பின்புலம் அவருக்கு இருந்தது. இவருடைய 16 உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அலைபாயும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அமைக்கப் பட்டிருக்கும் அரசு நிலைகுலையும்.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப் படும் ஊழலின் மையப் புள்ளியாக ராசா உள்ளார். அவர் தனது பதவியை பயன்படுத்தி விலை மதிப்புள்ள செல்பேசியின் ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை 2008ம் ஆண்டில் அடி மாட்டு விலைக்கு விற்றார் என்பதுதான் அவர் குற்றச் சாட்டு. இது தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் ஏறக்குறைய இந்திய கஜானாவுக்கு 40 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கும் என்று கடந்த வாரம் இந்தியாவில் வெளியான ஒரு புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக வெளியான இரண்டு முக்கிய அரசியல் ஊழல்களை அடுத்து இந்த ஊழல் வெளியாகியிருப்பது இந்திய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை அரித்துவிட்டிருக்கிறது. பரவலாக மிக நேர்மையான மனிதர் என்று அறியப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது இந்த விஷயத்தை துரிதமாக புலனாய்வு செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் அடித்தளத்தை இந்த ஊழல் ஆட்டம் காண செய்யும்.
ஒரு சாதாரண சிற்றூர் அரசியல்வாதியாக இருந்த ராசா இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆக முடிந்தது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான
இந்தியாவில் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும். சாதி அடிப்படையிலோ, குடும்ப அடிப்படையிலோ உருவாகும் சிறிய பிராந்திய கட்சிகள் இந்தியாவில் மிகப் பெரிய சக்தியாக விளங்கி அரசு இயந்திரத்தின் வலுவான பாகங்களை ஆக்ரமித்து தங்கள் கட்சி மற்றும் சொந்த கஜானாக்களை நிரப்பிக் கொள்கின்றன.
பல கட்சி கூட்டணி ஆட்சி என்றாலே, கொள்கைப் பிடிப்பு இல்லாத சிறிய கட்சிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டியதுதான் என்கிறார், அரசியல் நோக்கர் ப்ரேம் ஷங்கர் ஜா.
1989ம் ஆண்டு ராணுவ பேரங்கள் தொடர்பாக நடைபெற்ற ஊழல் காரணமாக தோல்வியை சந்தித்த ராஜிவ் காந்தி அரசாங்கத்துக்குப் பிறகு பாராளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக சிறிய, பிராந்திய கட்சிகளின் துணையோடு அரசு அமைப்பது என்பது, ஒரு சிக்கலான விவகாரமாகவே அமைகிறது. இது போன்ற பிராந்தியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் கொள்கை ஏதும் இல்லாமல் மத்தியில் கிடைக்கும் அதிகாரத்தை கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பாகவே பார்க்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை போன்ற துறைகளை நீண்ட அனுபவம் மற்றும் சிறந்த தலைவர்களிடம் கொடுத்துள்ளது. ஆனால் கூட்டணி அரசாங்கத்தின் யதார்த்தம் பெரிய துறைகளை சிறிய கூட்டணிக் கட்சிகளிடம் கொடுத்து, அது கேள்விக்குள்ளாகும் அரசியல்வாதிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதில் போய் முடிகிறது.
இந்த கூட்டணி அரசியல் மிக தர்மசங்கடமான ஊழல்களுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும் கடந்த காலத்தில் வழி வகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சி தலைவராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த கிழக்கு மாநிலம் ஜார்கண்டைச் சேர்ந்த ஷிபு சோரேன் என்பவர் 2006ல் ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டதற்காக பதவி விலக நேரிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தோற்கடித்து தனது கட்சியான திரிணாமூல் காங்கிரசை பதவியில் அமர்த்துவதையே ஒரே லட்சியமாகக் கொண்ட மம்தா பானர்ஜியின் கையில் தான் இந்தியாவின் மிகப் பெரிய வேலை வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே இருக்கிறது.
திமுக என்கிற ராசாவின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்தில் தமிழ் தேசியம் பேசுகிற விடுதலை இயக்கமாக இருந்து வந்தது. ஆனால், தனது கொள்கைகளை ஏறக்குறைய அந்த கட்சி கைவிட்டு விட்டது. எண்பதுகளில் உள்ள, சக்கர நாற்காலையை நம்பியுள்ள மு.கருணாநிதி மற்றும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அவரது வாரிசுகள் திமுகவை ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் குடும்ப தொழில் சாம்ராஜ்யமாக நடத்துவதாகவே தெரிகிறது.
2004ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, அதன் எதிரியான பிஜேபியின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் அணிக்கு வந்தது. இதற்கு பலனாக திமுகவுக்கு தொலைத் தொடர்புத் துறை போன்ற பல்வேறு துறைகள் வழங்கப் பட்டன.
கருணாநிதியின் கொள்ளுப் பேரனும் மீடியா ஜாம்பவானுமான தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகுமாறு டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மாறனுக்கும் கருணாநிதியின் மூத்த மகனுக்கும் முட்டிக் கொண்டது.
குடும்பச் சண்டையை சரிக் கட்டுவதற்காக மாறனுக்கு பதிலாக அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஆனால் கட்சியில் மிகப் பெரிய அதிகார மையமாக உள்ள தனது மகள் கனிமொழியோடு நெருக்கமான உறவு கொண்டுள்ள ராசாவை தேர்ந்தெடுத்தார்.
ராசா கல்லூரி நாட்களிலேயே அரசிசியலில் ஈடுபட்டவர். இவர் இதற்கு முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் தலித் சமூகத்தை சேர்ந்த முக்கியமான அரசியல்வாதியாக டெல்லி வட்டாரத்தில் அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு பெரிய பதவி கொடுப்பதால் தலித் வாக்குகளை பெற முடியும் என்றும் நம்பப் பட்டது.
“அவர் யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல, அதுவே அவருடைய பலம் மற்றும் பதவிக்கான தகுதி“ என்கிறார் தமிழ்நாடு அரசியலை பற்றி ஏராளமாக எழுதியவருமான வாசந்தி.
கட்சியை கவனமாக பொறாமை உணர்வோடு பரம்பரைச் சொத்து போல பாதுகாத்து வரும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் ராசா அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஸ்பெட்ரம் விற்பனையை கையாண்ட விதம், இந்தியாவின் சிறந்த அரசாங்கம் என்று கருதப்பட்ட ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டது.
19
இந்த ஊழல், இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவர் என்று கருதப்படும் மன்மோகன் சிங் மீது கூட கரி பூசி விட்டது. யாருமே சிங் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குறை சொல்லாவிட்டாலும் கூட, கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா கையாண்ட விதம் குறித்து விசாரணை கோரிய ஒரு மனுவை தாமதப் படுத்தியதற்காக குறை கூறியது.
யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் என்று மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தாலும், உடனடியாக ராசாவை பதவி நீக்கம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சி பதவியையும் கூட்டணியையும் காப்பாற்றுவதற்காக எந்த கொள்கையை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் என்ற முடிவை எடுக்க வைக்கிறது.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ராசா கூறினாலும் நவம்பர் 14 அன்று ராஜினாமா செய்தார். இந்தியாவின் சிபிஐ புலனாய்வை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியே ஊழல்களை சந்தித்தது. மோசமான தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பொறுப்பாளராக இருந்த மூத்த அரசியல்வாதி அவர் வகித்த ஒரு சாதாரண கட்சிப் பதவியைக் கூட ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மும்பையை தலைநகராகக் கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும், போரில் கணவனை இழந்த கைம்பெண்களுக்காக ஒதுக்கப் பட்ட வீடுகளை அபகரித்த குற்றத்திற்காக ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டார்.
இது போன்ற ஊழல்கள், 2014 தேர்தலில் வெற்றி பெற்று முழுப் பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுலின் கனவை தகர்த்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்
ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா,கனிமொழி ,நீரா, தொலைபேசி உரையாடல்-தமிழில்.
2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! தினமணியில் வெளியான தமிழாக்கம் இதோ.
அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும்,செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின்பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்
இதில் தமிழர்களாகிய வெகுளிகள்,அறியவேண்டியது யாதெனில் இவ்வளவு பெரிய ஊழல் வெளிவரக்காரணமே நிதி-மொழி-தயா-கிரி-பாலு-ராசா என அனைவருமே மு.க.விற்கு பிறகு திமுக-வின், ஆட்சி, அதிகாரம், கட்சி ஆகியவற்றை யார் கைபற்றுவது என்ற அதிகாரபோட்டிக்கான செயலாகவே உள்ளதை இந்த உரையாடல் தெள்ளதெளிவாக விளக்குகிறது.
ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்
நீரா: ஹலோ?
ராசா: ராசா பேசுகிறேன்.
நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.
ராசா: ஆ?
நீரா: பர்கா தத்
ராசா: அவர் என்ன சொல்கிறார்?
நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாகஅவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.
ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.
நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.
ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.
நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?
ராசா: ஆ?
நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...
ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.
நீரா: தனியாகவா?
ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.
நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?
ராசா: ஆம்.
நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.
ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார்,இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும்இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...
22.5.2009
மதியம் 2 மணி 29 நிமிடம்
41 விநாடிகள்
நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?
ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?
நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.
ராசா: ம்ம்...
நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...
நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.
ராசா: ம்ம்.
நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....
ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...
நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?
ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...
நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும்,ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும்,காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.
ராசா: ம்ம்.
நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.
ராசா: ஓஹோ! ஓஹோ!
நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...
ராசா: ம்ம்.
நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...
ராசா: ஓ...
நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
24.5.2009
காலை 11 மணி
5 நிமிடம் 11 விநாடிகள்
நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.
நீரா: தெரியும் அல்லவா?
ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம்,மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.
நீரா:ம்ம்..
ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.
ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...
நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?
நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?
ராசா: எனக்குத் தெரியாதே.
நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.
ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...
நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடுஇருக்க வேண்டும்.
ராசா: ஆ, இருக்கலாம்
கனிமொழி - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்
கனிமொழி: ஹலோ
நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...
கனி: ம்ம்
நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...
கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?
நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...
கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.
அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?
நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.
கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.
நீரா: ம்ம்..
...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.
நீரா: ஓகே.
கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.
22.5.2009
மதியம் 2 மணி 46 நிமிடம்
15 விநாடிகள்
கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?
நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.
கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக,எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)
நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?
கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.
நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன?நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?
கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.
நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?
கனி: ஆம், ஆம்.
நீரா: இதுதான் அரசியல், மை டியர்.
22.5.2009
இரவு 8 மணி 04 நிமிடம்
19 விநாடிகள்
நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...
நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறுஅறிவித்திருக்கிறார்.
கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப்பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால்,மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத்தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான்கேள்விப்பட்டேன், அவர்கள்...
நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.
23.5.2009
காலை 9 மணி 59 நிமிடம்
2 விநாடிகள்
நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள்புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.
கனி: அது சரி.
நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.
கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
நீரா: ஆம், சரிதான்.
கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.
நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு(மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.
வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல்
23.5.2009
இரவு 10மணி 26நிமிடம்
42விநாடிகள்
நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...
வீர்: மாறன்.
நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)
ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...
வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?
நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...
வீர்: சரி.
நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.
வீர்: | 600 கோடி சரியா?
நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.
வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?
நீரா: இல்லையா?
- நன்றி: "ஓபன்' வார இதழ்.
பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீராராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம்33விநாடிகள்
பர்கா: ஆ, நீரா?
நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.
நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.
நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம்,உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?
22.5.2009
காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்
நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும்.கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.
பர்கா: ஆம்.
நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.
பர்கா: ஆம்.
நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேசவேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடையமிகப்பெரிய பிரச்னை.
பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?
நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.
பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?
நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.
பர்கா: சாலைப்போக்குவரத்து, மின்சாரம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு,
ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.
நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.
பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம்,தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?
நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிடவேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.
பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல்கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.
பர்கா: சரி.
... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.
நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...
பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.
நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.
பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?
நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக்கூப்பிடுங்கள்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நியாயமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அ.தி.மு. ïwï© பொதுச் செயலாளர் A«âEÝ>çés ¶D\V ¶kìï^ 18.11.2009 ¶[® வலியுறுத்தி எழுதிய கடிதம்:
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் கே.எஸ். ராமசுப்பன், 15.11.2008-ல் தொலைதொடர்புத் துறை செயலாளர் சித்தார்த்த போராவுக்கு எழுதிய கடிதத்தில், "தொலைதொடர்பு அமைச்சகத்தின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கொள்கை சரியில்லை. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கேள்விகளுக்கு தொலைதொடர்புத் துறை அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறியுள்ளார்.
இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில், "இந்த விவகாரம் முழுவதையும் மத்திய அமைச்சரவை அதிகாரக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது அவசிய ம்' என்ற கருத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் 1.11.2007 அன்று அலுவலகக் குறிப்பில் தன் கைப்பட பதிவு செய்துள்ளார்.
ஆனால், 2.11.2007 அன்று மத்திய அமைச்சர் ஆ. ராசா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் "முதலில் வருபவருக்கு, முதலில் தருவது' என்ற சர்ச்சைக்குரிய கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ராசா கடிதம் எழுதிய அன்றைய தினமே, பிரதமர் மன்மோகன் சிங் ராசாவை எச்சரிக்கை செய்து கடிதம் அனுப்பினார். அதில், ""இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன், அனைத்து விவரங்களும் பிரதமருக்குத் தெரியப்படுத்த வேண்டும்'' என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு 26.12.2007 அன்று ராசா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரையும், தலைமை சட்ட ஆலோசகரையும் கலந்து ஆலோசித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து எந்த முறையை பின்பற்றுவது என்ற முடிவை தான் ஏற்கெனவே எடுத்துவிட்டதாகவும், தன்னுடைய நிலைப்பாடும், இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழுவின் நிலைப்பாடும் ஒத்துப்போவதாகவும் ராசா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 25.10.2007 அன்றைய அலுவலகக் குறிப்பின் மூலம், "முதலில் வருபவருக்கு, முதலில் ஒதுக்கீடு' என்பதற்கு பதிலாக, ஏல முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழுவின் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய ஆவணங்களிலிருந்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் "முதலில் வருபவருக்கு, முதலில் ஒதுக்கீடு' என்ற ராசாவின் யோசனைக்கு எதிராக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்ததும், பிரதமர் எச்சரித்ததும், தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணைக் குழு நேர்த்தியான ஏல முறை வேண்டும் என ஆலோசனை வழங்கியதும் தெரிய வருகிறது.
யுனிடெக், ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமங்களை மிகக் குறைந்து விலைக்கு வாங்கி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. சர்வதேச ஏல முறை இருந்திருந்தால், சர்வதேச நிறுவனங்கள் அந்த அதிகபட்ச விலையை இந்திய அரசுக்கு அளித்திருக்கும்.
தவறான கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றியதன் காரணமாக, இந்திய அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ராசா ஏற்படுத்தியிருக்கிறார்.
மத்திய கண்காணிப்பு ஆணையம் இதில் நடைபெற்றுள்ள ஊழலை உணர்ந்து, மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு பரிந்துரை செய்தது. புலனாய்வுத் துறையும், ஊழல் நடைபெற்றதற்கான போதிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் தொலைதொடர்பு அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் ராசா நீடித்தால், நீதியை நிலைநாட்ட முடியாது. சாட்சிகளை கலைக்கும் இடத்தில் இப்போது அவர் இருக்கிறார். எனவே, ராசாவை தொலைதொடர்பு இலாகாவிலிருந்து பிரதமர் விலக்கி வைக்க வேண்டும். அப்போதுதான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான கொள்கை பின்பற்றப்பட்டதை அறிவதோடு மட்டும் விசாரணை நின்று விடாமல், ரூ.1 லட்சம் கோடி ஊழலின் பயனாளிகள் யார் என்பதையும் கண்டறிய முடியும்.
ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் பங்குதாரர்கள் விசாரிக்கப்பட வேண்டும். மேலும் டைகர் ஹோல்டிங்ஸ், பீகாக், ஜெனிக்ஸ் எக்சிம் போன்ற நிறுவனங்களின் பின்னணி அறியப்பட வேண்டும்.
1960-களில் முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் நெருங்கிய வணிகத் தொடர்பு வைத்திருந்தது, மத்திய கிழக்குப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இ.டி.ஏ. குழுமம். அந்நிறுவனத்துக்கும் ஸ்வான் டெலிகாம், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனங்களுக்கும் தொடர்புகள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், இ.டி.ஏ. குழுமம் மூலம் இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
எனவே, பிரதமர் நீதியை நிலைநாட்ட வேண்டும். அப்போதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவரும். இல்லையெனில், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அது இந்திய ஜனநாயகத்தின் துக்க நாளாகக் கருதப்படும்.
ஆகவே, நியாயமான, நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 2ஜி ஸ்பெட்க்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளது.
பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகள் நடத்தி வரும் நிரா ராடியா என்ற பெண்ணின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிக்கியுது.
வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், நோயெசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ், விட்காம் கன்சல்டிங், நியூகாம் கன்சல்டிங் என பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகளை நடத்தி வரும் இந்தப் பெண், மாபெரும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அரசு,அமைச்சர்களுடன் பல டீல்களை முடித்துக் கொடுத்து வருபவர்..
இதற்காக தனது கன்சல்டிங் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு ஜடூஸ அதிகாரிகளைத் தான் பெருமாபாலும் பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் மூலம் அரசு திட்டங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்து, காய்களை நகர்த்தி காரியத்தை சாதிப்பவர்.
என்ஆர்ஐயான இந்த ரேடியா கடந்த 2000ம் ஆண்டில் தான் இந்தியாவுக்குத் திரும்பினார். வந்தவுடன் சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களுக்கு தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.
ராசாவால் 2ஜி தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுடன் ரேடியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து ரேடியாவின் தொலைபேசியை சிபிஐ சில காலமாக ஒட்டு கேட்டு வந்தது. இதன்மூலம் அவரது தில்லாலங்கடி வேலைகள் குறித்த விவரங்களும் ஆதாரங்களும் சிபிஐக்கு சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
ரேடியா விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியையும் சிபிஐ பெற்றுள்ளது. ரேடியாவின் 9 தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 120 நாட்கள் ஒட்டு கேட்டுள்ளது.
இதையடுத்து 2009ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 180 நாட்கள் இந்த தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் ஒட்டு கேட்டுள்ளனர்.
அதே போல மேலும் பல தொழிலதிபர்கள, அரசியல்வாதிகள், விளம்பர நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகளும் சிபிஐ, வருமான வரித்துறையால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறி்த்து ஏராளமான ஆதாரங்கள் சி்க்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த ஏராளமான பணம் ரியல் எஸ்டேட், நிறுவனங்கள், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளி்ல் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களும் இந்த ஒட்டு கேட்பு மூலம் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மிலாப் ஜெயினுக்கு சிபிஐ டிஐஜி வினீத் அகர்வால் எழுதியுள்ளகடிதத்தில், இந்த ஒட்டுக் கேட்பு மூலம் கிடைத்த முழுத் தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து ஜெயினின் உத்தரவுப்படி, நவம்பர் 20ம் தேதி வருமான வரித்துறையின் இணை இயக்குனர் அஷிஷ் அப்ரோல், சிபிஐ டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய பதிலில், நிரா ராடியாவுக்கும் அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் முழு விவரத்தையும் விளக்கியுள்ளார்.
அதில், நிரா ராடியா தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும்போது, தான் எப்படி பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கித் தந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.
மேலும் அமைச்சர் ராசாவுடனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது அவரது தனிச் செயலாளரராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவுடனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதையடுத்து சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறையின் ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வாங்க பெருமளவில் பணத்தை தயார் செய்து தந்ததாகவும் ரேடியா ஒருவரிடம் கூறியதாகவும் வருமான வரித்துறை சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.
உள்துறைச் செயலாளரின் அனுமதியோடு தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்பதையும் வருமான வரித்துறை கூறியுள்ளது
ராசாத்தி வீட்டில் வேலை செய்பவர்: மார்னிங் மேடம்.
நீரா ராடியா : ஹாங். மார்னிங்.
வீட்டில் வேலை செய்பவர் : மேடம் பேச விரும்புகிறார்கள். (இந்தியில்) கொடுக்கவா… ?
நீரா ராடியா. ஹாங். கொடுங்கள்.
நீரா ராடியா : ஹலோ.
ராசாத்தி அம்மாள் : ஹலோ.
நீரா ராடியா ஹலோ. எப்படி இருக்கிறீர்கள் ?
ராசாத்தி அம்மாள். நன்றி நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?
நீரா ராடியா : மன்னிக்கவும். உங்களுடன் தொடர்பில் இல்லை. நான் பிசியாக இருந்து விட்டேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறீர்களா ?
ராசாத்தி அம்மாள். நான் நன்றாக இருக்கிறேன்.
நீரா ராடியா : சிஎம் எப்படி இருக்கிறார் ? நன்றாக இருக்கிறாரா ?
ராசாத்தி அம்மாள். நன்றாக இருக்கிறார்.
நீரா ராடியா : கனி… ? கனியை நான் கடந்த வாரம் பார்த்தேன். இந்த வாரம் பார்க்கவில்லை. கனி சென்னையிலா இருக்கிறார் ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : அவர் திரும்பி வந்து விட்டார் அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ஆமாம்.
நீரா ராடியா : மற்ற விஷயங்கள் எப்படி உள்ளன ? நன்றாக உள்ளன அல்லவா ?
ராசாத்தி அம்மாள் : ம் ம் ம் ம். (புரியாத குரலில்… … இருங்க இருங்க) என்ன ஆச்சு ?
நீரா ராடியா : எதற்கு என்ன ஆச்சு ? டாடா ?
ராசாத்தி அம்மாள்: ஆமாம். ஆமாம்.
நீரா ராடியா : அது முடியவில்லையா ?
ராசாத்தி அம்மாள்: முடியவில்லை.
நீரா ராடியா : ரத்னம் இருக்கிறாரா ? ரத்தினத்திடம் போனை கொடுங்கள். நான் எல்லாம் முடிந்து விட்டது என்றல்லவா இருந்தேன். ?
ராசாத்தி அம்மாள்: ஒரு நிமிடம்.
நீரா ராடியா : ஹாய் ரத்னம்.
ரத்னம் : எஸ் மேடம்.
நீரா ராடியா : என்ன ஆச்சு ? அது இன்னும் முடியவில்லையா ?
ரத்னம் : இல்லை மேடம். முடியவில்லை. இப்போதுதானே உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : மேசேஜ் ஏதும் வரவில்லையே ? நான் எனது மொபைலை மாற்றி விட்டேன். என்னுடைய புது நம்பர் தெரியுமா ?
ரத்னம் : நான் அந்த நம்பரில்தான் உங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவர் கூட முயற்சி செய்தார்.
நீரா ராடியா : இல்லை. இல்லை. இதுதான் என்னுடைய ரெகுலர் நம்பர். இன்டிகாம். டாடா இன்டிகாம்.
ரத்னம் : டாடா இண்டிகாம். உங்கள் மொபைல் நம்பரை மாற்றி விட்டீர்களா ?
நீரா ராடியா : ஆமாம். 09250008888
ரத்னம் : இந்த நம்பர் எங்களுக்கு கொடுக்கப் படவில்லை.
நீரா ராடியா : கடந்த வாரமே நான் சிசிலியாவிடம் சொன்னேன்.
ரத்னம் : சிசிலியாவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
நீரா ராடியா : நான் ஏன் என்று சொல்கிறேன். கடந்த வாரம் அவர் தாயார் மருத்துவமனையில் இருந்தார்.
ரத்னம் : அது எனக்கு தெரியும்.
நீரா ராடியா : அவர் ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கிறார். அதனால்தான் அவர் கொஞ்சம் பிரச்சினையில் இருந்தார்.
ரத்னம் : ஆனால் நீங்கள், நீங்களாகவே முடித்து விடுவேன் என்று சொன்னீர்கள் அல்லவா ?
நீரா ராடியா : ஆமாம்.
ரத்னம் : அது போல முடியவில்லை. அதனால்தான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்.
நீரா ராடியா : என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி என்று ?
ரத்னம் : ஆமாம் மேடம். ஆமாம் மேடம்.
நீரா ராடியா : எப்படி இப்படி ஆயிற்று ? டாடாவைப் பற்றி என்ன ? அதில் என்ன நடக்கிறது ?
ரத்னம் : எல்லாம் ஓகே. ஆனால் இந்த 50 சதவிகித வாடகை. நேற்று எனக்கு ஒரு மெயில் வந்தது. நேற்று கூட உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் 50 சதவிகித வாடகையை நாங்கள் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏற்கனவே கிருஷ்ணகுமாருக்கு அது முடியாது என்று பதில் அனுப்பி விட்டோம். கிருஷ்ணகுமாருக்கு நான் தொலைபேசி செய்தேன். ஆனால் அவர் எடுக்கவேயில்லை. அதனால் நான் சஞ்சய் ஓபாலியாவை தொடர்பு கொண்டேன். அவர் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டு விஷயங்களை முடித்து தருவதாகச் சொன்னார்.
நீரா ராடியா : நீங்கள் பாம்பேயில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்கள் அல்லவா ?
ரத்னம் : கிருஷ்ணகுமாரும் அப்போது, தெளிவாக வோல்டாஸ் நிறுவனத்தோடு பேசி, வாடகையை ரத்து செய்வதாக தெரிவித்தார்.
நீரா ராடியா : சரி.
ரத்னம் : ஆனால் நேற்று முழு நாளும் நான் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டேன். 10 முறை முயற்சி செய்தேன். அவர் ஏதோ மீட்டிங்கில் இருக்கிறார் போல.
நீரா ராடியா : ஆமாம். நேற்று இந்தியா ஹோட்டல்களின் போர்டு மீட்டிங். வருடாந்திர கணக்குகளை வெளியிட்டார்கள். அதோடு பாம்பேயில் சீ ராக் ஹோட்டலை வாங்குவது தொடர்பாகவும் பேசினார்கள். அதனால் தான் கிருஷ்ணகுமாரை நேற்று தொடர்பு கொள்வது மிகவும் சிரமம்.
ரத்னம் : அதனால்தான் நான் உங்களை தொடர்பு கொண்டேன். இதைப் பற்றி சொல்வதற்காக.
நீரா ராடியா: விடுங்கள். நான் அவரோடு பேசுகிறேன். அவரோடு நான் திங்கள் கிழமை பேசுகிறேன். ஏனெனில் அவர் சேர்மேனோடு போய் விட்டார் என்று நினைக்கிறேன். அவர் அமேரிக்கா போய் விட்டார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : யார் மேடம் ?
நீரா ராடியா: கிருஷ்ணகுமார் மீண்டும் இன்று அமேரிக்கா செல்கிறார் என்று நினைக்கிறேன்.
ரத்னம் : ஒரே ஒரு நாள்தான் என்று நினைக்கிறேன். வியாழக்கிழமை தான் அவர் திரும்பி வந்தார்.
நீரா ராடியா: இல்லை இல்லை. அவர் மீண்டும் சென்றிருக்கிறார். அவர் அவருடைய சேர்மேனோடு இன்று செல்கிறார்.
ரத்னம் : அப்படியா மேடம்.
நீரா ராடியா: ஆமாம். ஆமாம். அவர் இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் கிளம்ப வேண்டியது. நான் செக் செய்கிறேன். நான் செக் செய்து விட்டு சொல்கிறேன். அவருடன் நான் பேசுகிறேன். ஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
ரத்னம் : ஆமாம் மேடம். அந்த இன்னொரு விஷயம்…. … அதற்காகத் தான் நான் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மற்றொரு மொபைல் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
நீரா ராடியா: நான் அவரோடு பேசுகிறேன். பேசி விட்டு சொல்லுகிறேன்.
ரத்னம் : சொல்லுங்கள். உங்களின் அந்த நம்பர்.
நீரா ராடியா: ஆமாம் அதில் நான் இருப்பேன். ஒன்று செய்யுங்கள். உங்களின் அந்த போனிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். உங்களிடம் வேறு போன் இல்லையா ?
ரத்னம் : இருக்கிறது மேடம்.
நீரா ராடியா: அதிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
முதலில் 2007ல் ராஜ்ய சபை உறுப்பினரான கனிமொழி தனது சொத்துக் கணக்கு என்று என்ன தாக்கல் செய்துள்ளார் என்பதை பார்த்து விடுவோம்.
இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை 6,40,00,000
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 16,52,000
ஷேர்கள் 3,50,000
டொயோட்டா கேம்ரி கார் 17,50,000
நகை 3,61,000
அண்ணாசாலையில் வணிக வளாகம் 1,61,47,000
மொத்தமாக ஒரு எட்டு கோடி ரூபாய் வைத்துக் கொள்ளலாம். இந்த எட்டு கோடி ரூபாயே கனிமொழிக்கு ஏது என்பது தனிக் கதை. தற்போது, சென்னை அண்ணா சாலையில் எஸ்ஐஈடி கல்லூரி எதிரில் வோல்டாஸ் ஏ.சி நிறுவனம் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் வோல்டாஸ் நிறுவனம் வாடகைக்கு இருந்தது. வோல்டாஸ் நிறுவனத்துக்கும், நிலத்தின் சொந்தக் காரருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் அந்த இடத்தை வாங்க முயற்சி செய்ய, சொந்தக் காரர் மறுக்க பிரச்சினை பஞ்சாயத்துக்காக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளிடம் செல்கிறது.
ராசாத்தி அம்மாள் பிரச்சினையை சிறப்பான முறையில் தீர்த்து வைக்கிறார். என்ன செய்கிறார் என்றால், நீங்கள் இருவரும் அடித்துக் கொள்ளாதீர்கள். நிலத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, அதன் படியே வாங்கிக் கொள்கிறார். அந்த இடம் மொத்தம் 18 கிரவுண்டுகள். 2009 அன்று சந்தை நிலவரப்படி 300 கோடிக்கு போகும். ராசாத்தி அம்மாள் என்ன விலை கொடுத்து வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு பதிலாக ரத்தன் டாடா அவரிடம் ஒரு பேரம் பேசுகிறார். என்னவென்றால், தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகக் கூடாது என்பதுதான் அந்தப் பேரம். இதை ஒட்டியே கனிமொழி நீரா ராடியாவிடம் மாறனை மந்திரி சபையில் சேர்க்கக் கூடாது என்று பேசுகிறார்.
மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகாவிட்டால், அதற்கு பதிலாக அந்த இடத்தில் என்ன கட்டிடம் கட்டுகிறார்களோ, அந்தச் செலவு டாடா குழுமத்தினுடையது என்று பேசி முடிக்கப் படுகிறது.
ராசாத்தி அம்மாள் ஐந்து நட்சத்திர விடுதி கட்டலாம் என்றும், கனிமொழி “ராசாத்தி மருத்துவமனை“ கட்டலாம் என்றும் திட்டமிடுகின்றனர்.
| ‘சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன்’ (Centre for Public Interest Litigation) என்ற அமைப்பும் Ûª>V ïâEÝ >çékì ]ò.சுப்பிரமணியன் சுவாமியும் தனித்தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்குதொடுத்திருந்தனர். |
2009 மே 29ஆம் தேதி ஆ. ராசா இரண்டாம் முறையாகப் பதவியேற்றார். அவர் பதவியேற்று 24 மணிநேரத்திற்குள் நீதியரசர்கள் முகுல் முட்கல், வால்மீகி ஜே மேத்தா ஆகியோரை உள்ளடக்கிய தில்லி உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் ஒன்று டிஓடிக்கு எதிராகக் கடுமையான கருத்தை வெளியிட்டது. “அலைக்கற்றைகள் சினிமா டிக்கெட்களைப் போல விற்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். பொதுமக்களின் பணமும் மதிப்புமிக்க வளங்களும் இந்த வகையில் வீணடிக்கப்பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இது அதிரவைக்கும் விவகாரம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை குறித்தும் நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம்.
“விசாரணைக்கு உத்தரவிட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இனியும் என்ன செய்கிறீர்கள்? இத்தனைக்கு பிறகும் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர் மாற்றப்படவில்லை. விசாரணையின் போக்கைப் பார்த்தால், இன்னும் பத்தாண்டு இழுப்பீர்கள் போல? நேர்மையை கடைபிடிக்கும் விஷயத்தில், அரசே எவ்வளவு அக்கறையாக நடந்து கொள்கிறது என்பதை இதை வைத்தே தெளிவாக அறிய முடிகிறது...’’
-ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில்தான் இப்படி மத்திய அரசை காய்ச்சி எடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக